"சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை. இந்த அமானுஷ்ய கதையில் வரும் சிவகாமியின் நடவடிக்கைகள் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. சிவகாமியின் ஒரே மகள் இதயா. சிவகாமியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் இதயாவுக்கு திருமணத்தை நடத்த முடிவு செய்து வரன் பார்க்கிறான். நல்ல வரன்கள் வருகின்றன. அந்த வரன்களில் யாரைத் தேர்ந்து எடுப்பது என்கிற குழப்பம் வருகிறது. குழப்பத்தை தீர்த்துக்கொள்ள, சிவகாமி தன் மகள் இதயா வெளியே போனதும், மாடியில் பூட்டப்பட்டிருக்கும் ஒரு அறையைத் திறந்து கொண்டு உள்ளே போகிறாள். நூலாம்படைகளை விலக்கிக்கொண்டு ஒரு தேக்குமர பழைய பீரோவைத் திறக்கிறாள். பீரோ சத்தமில்லாமல் திறந்து கொள்ள, உள்ளே பீரோவின் இரண்டாவது அறையில் இரண்டடி உயரத்திற்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி தெரிய, ஜாடியின் கழுத்துப் பாகம் வரைக்கும் ஃபார்மலிக் அமிலம் நிரம்பிருக்கிறது... அதன் உள்ளே..? தீப்பிடித்த தென்றலைக் கேளுங்கள். செவிகளும் தீப்பிடிக்கும்."