"இரண்டு பணக்கார இளைஞர்கள் தனியாக உட்கார்ந்து குடிபோதையில் பல விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேடிக்கையாக பேச ஆரம்பித்த ஒரு விஷயம் வினையாக மாறுகிறது. அதாவது என்னதான் திட்டம் போட்டு ஒருவரை கொலை செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து கொலையாளியால் தப்ப முடியாது. அவன் ஏதாவது தப்பு செய்து மாட்டிக்கொள்வான் என்று ஒருவன் சொல்ல, இன்னொரு நண்பன் அதை மறுக்கிறான். "புத்திசாலித்தனமாய் யோசித்து துல்லியமாய் திட்டம் போட்டு ஒருவரை கொலை செய்தால் போலீஸையும், சட்டத்தையும் ஏமாற்ற முடியும். ஒரு கொலை செய்கிறேன். நான்தான் கொலை செய்தேன் என்பது போலீஸுக்கு எந்தக்காலத்திலும் தெரியப் போவதில்லை. ஒரு வருட கால அவகாசம். போலீஸ் கையில் நான் மாட்டிக் கொள்ளாவிட்டால் உன் சொத்தை என்னுடைய பெயர்க்கு நீ எழுதி வைக்க வேண்டும். நான் மாட்டிக்கொண்டல் என்னுடைய சொத்து உனக்கு..." இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். பந்தயப்படி அந்த நண்பன் கொலை செய்தானா.... கொலை செய்திருந்தால் பிடிபட்டானா? என்பதை சொல்லும் கதைதான் அஞ்சாதே அஞ்சு."