"அக்கிரமங்கள் நிறைந்த இன்றைய அரசியல் களம் ஒரு சூதாட்டங்கள் நிறைந்த கொலைக்களம். அதில் ஒரு சிறிய தீப்பொறியை அணைக்க முற்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடப்பதெல்லாம் அதை காட்டுத்தீயாக மாற்றுகிறது. விறுவிறுவென நடக்கும் கண்ணுக்கு தெரியாத யுத்தத்தில் யாரெல்லாம் பகடைக்காய்களாக மாறுகிறார்கள் யாரெல்லாம் உயிரை இழக்கிறார்கள் என்பதை அறிய அறிய இதயம் பதைபதைப்புக்கு உள்ளாகும். திசைமாறிப் போகும் ஒரு சாதாரண கொலை வழக்கை மிகச்சரியான பாதைக்குக் கொண்டு வர போராடுகிறான் நம் ஹீரோ க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக். இது போன்ற சிக்கலான வழக்குகளை சரிவர கையாளவிவேக்கை விட்டால் காவல்துறையில் யாரும் இல்லை என்கிற எண்ணம்தான் கேட்கும் உங்களுக்கு கண்டிப்பாக வரும் .பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு பொலிடிக்கல் க்ரைம் த்ரில்லர்."