"தப்பு என்பதே ஒரு தப்பான விஷயம். அந்தத் தப்பையே தப்புத் தப்பாய் பண்ணினால் எப்படியிருக்கும் ? குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், நீதி தேவதை ஏதாவது ஒரு வடிவில் வந்து அவர்களைத் தண்டிப்பது காலத்தின் கட்டாயமாக மாறுகிறது. இது ஒரு சோஷியோ க்ரைம் த்ரில்லர். நாவலின் நாயகி காயத்ரியும், நாயகன் சத்யநாராயணனும் எதிர்பாராதவிதமாய் தெருவில் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் கல்லூரியில் படித்தவர்கள். காயத்ரியிடம் சத்யநாராயணன் இப்போது நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்க, அவள் தன்னிடம் உள்ள பையைத் திறந்து காட்டி, "ஊதுவத்தி வியாபாரம்தான் என்னுடைய பிசினஸ். வீடுவீடாய் போய் விற்று வருகிறேன்" என்று சொல்ல சத்யநாராயணன் அதிர்ந்து போய் அவளிடம், " காயத்ரி ! இதை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கலை. பள்ளியிலும், கல்லூரியிலும் நீ ஒரு கெட்டிக்கார மாணவியாய் இருந்தாய். நீ ஒரு நல்ல வேலையில் இருந்து உனக்குத் திருமணமும் நடந்து இருக்கும் என்று நினைத்தேன். உன் வாழ்க்கையில் என்னதான் நடந்தது என்று கேட்க காயத்ரி ஒரு விரக்தி சிரிப்போடு, " விதி சிரிக்கும்போது நாம் அழ வேண்டியிருக்கிறதே " என்று சொல்கிறாள். அவள் சொன்ன இந்த வரியில் இருந்துதான் " தப்புத் தப்பாய் ஒரு தப்பு " நாவல் சூடு பிடிக்கிறது. காயத்ரியின் தற்போதைய நிலைமைக்கு எது காரணம் யார் காரணம் என்பது ப்ளாஷ்பேக்கில் தெரிய வரும்போது வாசகர்கள் ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டு உறைந்து போவது மட்டும் நிச்சயம். காரணம் PALM MEMBRANE. அது என்ன "PALM MEMBRANE" என்று கேட்கிறீர்களா ஆடியோவில் நாவலைக் கேளுங்கள்."