"கார்டியாலஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனும், ஹரேஷூம் ஃபைவ் ஸ்டார் அந்தஸ்தோடு கூடிய மிகப் பெரிய ஹாஸ்பிடலை நடத்தி நகரில் நல்ல பெயர் எடுத்து இருப்பதால் அவர்களுக்கு எதிரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கெட்டப் பெயரை உண்டாக்க வேண்டும் என்பதற்காக மறைமுக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அனந்த கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. போலீஸ் விசாரணையில் இறங்கி டாக்டர்கள் அனந்த கிருஷ்ணனுக்கும், ஹரேஷூக்கும் எதிராகவும், மறைமுகமாகவும் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது, அவர்களால் முடியாமல் போகவே க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர் விவேக் அதிரடியாய் விசாரணையில் இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். விவேக்கின் புத்திசாலித்தனமான நுணுக்கமான புலனாய்வு நடவடிக்கைகள் மூலம் உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளி யார் என்பது தெரியும்போது அனைவர்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. "அது எதுமாதிரியான அதிர்ச்சி என்று அறிய விருப்பமா ? "க்ரைம் த்ரில்லரான ஊமத்தம்பூக்கள் நாவலை ஒலி வடிவில் கேளுங்கள்."