"சித்ரா ஆபீஸ் வேலைக்குப் போகிற ஒரு குடும்பப்பெண். கணவன் முரளி பலவித கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானவன். சரிவர வேலைக்குப் போகாமல் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறான். அன்றைய தினம் ஆபீஸீக்குப் போகும் சித்ராவுக்கு எதிர்பாராத பிரச்சினை ஏற்படுகிறது. அவளுடைய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பத்மநாபன் அவளை தன்னுடைய அறைக்கு வரவழைத்து ஒரு சிறிய சூட்கேஸை அவளிடம் கொடுத்து அவளுடைய வீட்டில் பத்திரமாய் வைத்திருந்து ஒரு வாரம் கழித்து திரும்பவும் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்கிறார். சித்ரா முதலில் மறுத்தாலும், கம்பெனியின் எம்.டி. சொல்கிறாரே என்று தயங்கி வாங்கிக் கொள்கிறாள். அதற்கு அடுத்த நாளே, ஒரு அதிர்ச்சியான விஷயம் நடக்கிறது. என்ன செய்வது என புரியாமல் இருப்பவளுக்கு மேலும் அதிர்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைப்பெருகின்றன. சித்ரா அந்த பிரச்சினைகளையெல்லாம் எப்படி புத்திசாலித்தனமாய் சமாளித்து வெளிவருகிறாளா இல்லையா என்பது தான் மற்றவை நள்ளிரவு 1.05க்கு என்பதின் கதை. அது சரி.., தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? கேட்டால் புரியும் மர்மம் விலகும்."
Raaisel- en spanningsverhale