"தியாகு ஒரு பணக்கார ,இளைஞன். அவனுக்கு ஒரு அண்ணனும் அண்ணியும் இருக்கிறார்கள். அவன் ஒரு "சைக்கோ" என்பது வெளியே யாருக்கும் தெரிவது இல்லை. குடும்பத்தில் இயல்பாய் இருந்து கொண்டே அவ்வப்போது மனநோயாளியாய் மாறி சில விபரீதங்களைப் புரிகிறான். அவனுடைய இந்த செயல்களுக்கு ஒரு நாயும் துணை புரிகிறது. தியாகு ஒரு சைக்கோவாக மாற என்ன காரணம் ? அவனைப் பிடிக்க காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளில் இருந்தும் தியாகு எப்படித் தப்பிக்கிறான்... கடைசியில் அவன் மாட்டுவானா, இல்லை அவனுக்கு வேறு ஒரு முடிவு காத்திருக்கிறதா ? நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாய் நகரும் எதிர்பாராத சம்பவங்கள் கேட்பவர்களைத் திகைக்க வைக்கும்"
Kriminalgåtor och spänning