இளம் வருமான வரி அதிகாரிகளான சாதூரியா மற்றும் நித்திலன் "ஆபரேஷன் ஆக்டோபஸ்" என்னும் விசாரணையில் தவறான வழியில் ஒரு அரசியல் புள்ளி ஈட்டிய வருமானத்தை வெளியில் கொண்டுவர ஈடுபடுகிறார்கள். நான்கு பக்கங்களிலிருந்தும் இந்த பணத்தை அடைய பலர் துடிக்கிறார்கள். இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சிபிஐ மற்றும் வருமான வரி அதிகாரிகள் இடையில் நிகழும் பற்பல மர்மமான தொடர் கொலைகளினால் குழப்புகிறார்கள் . பல எதிர்பாராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த கதை "பைவ் ஸ்டார் துரோகம்".