வாழ்க்கையில் நாம் எத்தனையோ பெரியவர்களையும், மகான்களையும், மகனீயர்களையும் சந்திக்கிறோம். அவர்களின் தோற்றமும், கருணை பொழியும் விழிகளும் நம்மை நெகிழச் செய்கின்றன. கோடிக்கணக்கான மனிதப் பிறவிகளில், இவர்கள் மட்டும் ஏன் நம் உள்ளத்தில் பக்தி பரவசத்தை ஊட்டுகிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நமக்கு அது தேவையானதாகத் தோன்றுவதில்லை. காரணம், அவர்களின் ஞானமும், பண்பும் அப்படிப்பட்டவை.