எத்தனையோ பயணங்கள்... பிறந்தது முதல் இறுதிவரை. பயணங்கள் இல்லாத காலம் உண்டா என்ன? தொழில் முறையிலும், நண்பர்களுடனும், குடும்பத்தோடும் பல முறை பல்வேறு இடங்களுக்கும் பயணங்கள் அமைந்து வருகின்றன. அந்தக் கணங்களை எவ்விதமேனும் பதிவுசெய்து அந்த நினைவுகளைப் பின்னால் ஒரு நாளில் அசைபோட்டுப் பார்க்கலாமே என்றுதான் எழுதத் தொடங்கினேன். கல்கி, கோபுரதரிசனம், பெரியவர் விக்கிரமனின், அமுதசுரபி, கிரிஜா ராகவனின் லேடீஸ் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் அந்தக் கட்டுரைகளை வெளியிட்டு ஏன் எழுத்தார்வத்துக்கு நீர் வார்த்தார்கள். விளையாட்டுப்போல் என்று தொடங்கி எழுத ஆரம்பித்து அவற்றை நூலாகவும் வெளியிட்டு மகிழ நண்பர்கள் உதவினார்கள். இதுவரை எட்டு பயணத் தொகுப்புக்கள் வெளியாகிவிட்டன. இது. ஒன்பதாவது பயண நூல்!