பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதிப்பகுதி தமிழக வா லாற்றில் மிகவும் முக்கியமான திருப்பமாக விளங்குகிறது. மதுரை மண்ணில், குறிப்பாக மறவர் சீமையில் அரசியல் மாற்றங்கள் மிகவும் விரைவாக உருப்பெற்றன. அத்துடன் வரலாறு காணாத வறட்சியும் மக்களை வாட்டி வதைத்தது. இந்தக் கொடுமைக்கு இடையில், பரங்கியரது ஆதிக்க வெறி, அருகம்புல்லைப்போல தாவிப்பரவியது.
இத்தகைய கொந்தளிப்பான நிலையில், சிவகங்கை அரசின் பிரதானிகளாகச் செயல்பட்ட மருது சேர்வைக்காரர்கள், தமிழக மக்களின் தன்மான உணர்வை அறுதியிட்டுக்காட்டும் துணிச்ச லான முடிவை மேற்கொண்டனர். அதுவரை அவர்களது அருமை நண்பர்களாக இருந்து வந்த அவர்கள். ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரையும் அவர்களது ஆதிக்க கொள்ளையையும் எதிர்த் துப் போராடுவது என்பது அவர்களது முடிவு 'நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை, தீயினத்தின் அல்லல் படுப்ப துரஊம் இல்லை" யல்லவா? ஆனால் இந்த முடிவைச்செயல்படுத்த வல்லோரின் துணை வேண்டும். நெல்கட்டும் செவ்வல் பூலித்தேவர், நவாப்பையும் அவரது கூலிப்படையான கும்பெனியாரையும் பொருதுவதற்கு மைசூர் மன்னர் ஐதர்அலியின் பேராதரவு அவ ருக்கு இருந்தது. மதுரையை முற்றுகையிட்ட நவாப்பின் படை களை முறியடிக்க கம்மந்தான் கான்சாகிபுவிற்கு பிரஞ்சு ராணுவம் கை கொடுத்து உதவியது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தாக்கு தலை தொடுப்பதற்கு கட்டபொம்மு நாயக்கருக்கு டச்சுக்காரர் களது ஆயுதங்களும் பணமும் உதவின. ஆனால், சிவகங்கை சேர்வைக்காரர்கள், கும்பெனியாருடன் மோதுவதற்கு வெளியில் இருந்து உதவி பெறும் வாய்ப்பு இல்லை. எனினும், சிவகங்கைச் சீமை மக்களது மகத்தான துணிச்சலிலும், திறமையிலும் நம் பிக்கை கொண்டவர்களாக பரங்கிகளுடன் பொருதினர். முழுமூச் சுடன் போராடினர்.
அதுவரை, நேருக்கு நேர் நின்று போரிடும் இயல்பான முறையுடன், கட்டுப்பாடும் ராணுவப்பயிற்சியும் மிக்க எதிரியை, மறைந்து இருந்து தாக்கும் கொரில்லாப் போரினையும் மேற் கொண்டனர். பலபோர்களில் நூற்றுக்கணக்கான மறவர் மடிந் தனர். பிறந்த மண்ணைக் காப்பதற்காகப் போராடினோம் என்ற மன நிறைவுடன், வெள்ளைப் பரங்கியரின் வெடிமருந்துச் சாத னங்கள் - அவைகளைத் திறமையாகப் பயன்படுத்தும் பயிற்சிமறவர் சீமை மக்களது வீரத்தை வெற்றி, கொண்டன. அவர்க வது சூழ்ச்சியும் துரோகமும் போராளிகளது எதிர்ப்பு அணியைப் பிளந்து, எளிதில் வெற்றி கொள்ள உதவின. என்றாலும் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக, மகத் தான நாட்டுப்பணியாக இராமநாதபுரம், சிவகங்கைச் சீமை களில் ஆறுமாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வந்த மருது சகோதரர்களும் அவர்களது வழியினரும், உற்றமும் சுற்றமும் - அனைத்து ஆண்மக்களும் - விடுதலைப்போரின் வெகுமதியாக தாக்குமரங்களில் தொங்கவிடப்பட்டனர். இருநூறு ஆண்டு களுக்கு முன்னர், நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றி சிந் தித்து செயல்பட்டவர்களுக்கு, வெஞ்சினத்துடனும் வீர சாகசங் கருடன் போரிட்ட நல்லவர்களுக்கு, ஏகாதிபத்தியத்தின் அன் றைய வாரிசான ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியார் வழங்கிய அரிய பரிசு-தூக்குத்தண்டனை.
அவர்களது வீரமிக்க போராட்டமும். தன்னலமற்ற தியா கமும், இந்திய தேசிய வரலாற்றில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக் கத்தில், சிறப்பு மிக்க புனித ஏடுகளாக இருந்து வருகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னால் மறவர் சீமையின் முன்னோடி யாக விடுதலை வேள்வியில் களபலியாகிய இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி (கி. பி. 1762-95) மன்னரை மறந்தது போல, சிவகங்கைச் சேர்வைக்காரர்களது இணையற்ற போராற்றாலையும் தியாகத்தையும் இந்திய தேசிய இயக்க வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்பையும், தமிழகமக்களும், வரலாற்று ஆசிரி பக அறம், அரசினரும் இதுவரை புரிந்து கொள்ளவில்லை. மறந்து ரிட் இங்கிய தேசிய இயக்கம், கி. பி. 1857-ல் தான் சிப்பாய் கலகம் வாயிலாக துவங்கியதாகக் கணிக்கப்படுகிறது.
நமது நாட்டு விடுதலைப் போராட்டங்களின் சரியான வடிவத்தை ஆதார பூர்வமான சித்தியத்தை வரைவதற்கு முனைந்துள்ளேன்.
தமிழகத்தின் சுயேச்சைத்தன்மை, சிந்தனைகள் - இவை களின் அடிப்படையில் எழுந்த பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், பாரம்பரிய தொழில்கள் ஆகியவைகளை அழிக்க முனைந்த கும்பெனியார் என்ற ஏகாதிபத்திய வெறியர்களை அழிக்க 1792-95ல் முனைந்தார் முத்துராமலிங்க சேதுபதி மன்னர். அவருடைய நிறைவு பெறாத சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து மறவர் அணிகளை ஆங்காங்கு திரட்டி, வெள்ளைப்பரங்கிகளை யும் அவர்களது கூலிப்படைகளையும் வீழ்த்தி அழிப்பதற்கு கி.பி. 1801ல் விடுதலைப் போரைத் துவக்கியவர்கள் சிவகங்கை சேர்வைக் காரர்கள். அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், பிறந்த பொன்னாட்டின் பெருமையைக் காக்கப்போராடிய பாங்கும் தியாக உணர்வும், வேறுநாட்டுப் போராட்ட எடுகளிலும் காண இயலாத தாக உள்ளன. 'மா ஆயிரம் பட மடிந்த களப்போர் உரைப்போருக்கு நாவு ஆயிரமும் நாள் ஆயிரமும் வேண்டும் 'என்ற ஜயங் கொண்டாவது பாடல்தான், அவர்களது விடுதலைப் போராட்டத் தைப் புலப்படுத்தப் பொருத்தமாக உள்ளது.
என்றாலும், இதுவரை சிவகங்கை சேர்வைக்காரர்கள் பற்றி புனையப்பட்டுள்ள நாடோடி இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று
நூல்கள், அவைகளில் கண்டுள்ள செய்திகள் அனைத்தும் பெரும் பாலும் மிகைப்படுத்தப்பட்டனவாகவே உள்ளன. ஆதலால், அவை களை விடுத்து விடுதலைக்குப் போராடிய இந்த வீரர்கள் பற்றிய உண்மையான தியாகவடிவை. பல்வேறு ஆவணங்களின் துணைக் கொண்டு இந்த நூலில் சித்திரிக்க முயன்றுள்ளேன். சிவகங்கை சீமை சேர்வைக்காரர்கள் பற்றிய முழுமையான நூலாக இந்த கால் அமையாவிட்டாலும், அவர்களது பொன்றாப் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய
விவரமான தகவல்களைத் தருகின்ற முதல்நூலாகக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் இந்த நூலில் பொதிந்துள்ள உண்மை விவரங் களை கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு ஆவணங்களில் இருந்து படித்து குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்கு மேலான அனுமதி வழங்கிய சென்னை, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வர லாற்று ஆராய்ச்சி நிலைய ஆணையர் அவர்கட்கும், ஆவணங்களை
கோரிய அப்பொழுதைக் கப்பொழுது வழங்கி உதவிய சென்னை தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகப் பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை இங்கு புலப்படுத்தி அமைகிறேன்.
எஸ். எம். கமால்