அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘தலைமைத்துவம்’ எனும் இந்நூலில், வெற்றி’ நிபுணரான பிரையன் டிரேசி, நீங்கள் ஒரு சிறந்த தலைவராக ஆவதற்கு நீங்கள் தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டிய பல முக்கியமான விஷயங்களையும் அவற்றை எவ்வாறு நீங்கள் செயல்படுத்துவது என்பதையும் விளக்கியிருக்கிறார்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த 21 உத்திகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
· மற்றவர்களிடம் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்த்தெடுப்பது எப்படி
· தாங்கள் ஒரு குறிக்கோளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை உங்கள் ஊழியர்களிடம் ஏற்படுத்துவது எப்படி
· பாதகமான சூழ்நிலைகளை வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளுவது எப்படி
· வெற்றி பெறும் குழுக்களை உருவாக்குவது எப்படி
· சாதாரணமான மக்களிடமிருந்து அசாதாரணமான விளைவுகளைப் பெறுவது எப்படி
· நிறுவனத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக்கூடிய ஒருவராக எல்லோரும் உங்களைப் பார்க்கும்படியான ஒரு நபராக ஆவது எப்படி
உலகில் இன்று தலைசிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழுபவர் பிரையன் டிரேசி. 75 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான பெருநிறுவனங்களுக்கும் 10,000க்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தலைமைத்துவம், மேலாண்மை, விற்பனை, வியாபார மாதிரி மறுசீரமைப்பு, லாப மேம்பாடு ஆகிய விஷயங்களில் பல கருத்தரங்குகளை அவர் வடிவமைத்து வழங்கியுள்ளார். உலகம் நெடுகிலும் 5,000க்கும் அதிகமான சொற்பொழிவுகளை அவர் ஆற்றியுள்ளார். இதை 50,00,000க்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். அவர் தற்போது ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள சுவாரசியமான, காணொளி சார்ந்த பயிற்சி வகுப்புகள் 38 நாடுகளில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. பிரையன் டிரேசி ஒரு வெற்றிகரமான நூலாசிரியர். அவர் 80க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். அவை 42க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.