Marketing (Tamil)

Manjul Publishing
4.5
2 reviews
Ebook
122
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன.


அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘சந்தை நிர்வாகம்’ எனும் இந்நூலில், உங்கள் தொழிலின் வெற்றி உங்களுடைய சந்தை நிர்வாகத்தின் வெற்றியையே முழுமையாகச் சார்ந்துள்ளது என்பதை பிரையன் டிரேசி தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார். வாடிக்கையாளர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை, அவர்களின் வாங்குசக்தி எவ்வளவு போன்றவற்றை உங்களால் துல்லியமாகக் கணிக்க முடிந்து, அவற்றைக் கச்சிதமாக நிறைவேற்றுகின்ற விதத்தில் உங்கள் பொருட்களை உங்களால் அவர்களுக்கு வழங்க முடிந்தால், நீங்கள் உங்கள் தொழிலில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெறுவீர்கள்.

உங்கள் தொழிலில் நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தத்தக்க சக்திவாய்ந்த 21 உத்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இவையும் அடங்கும்:


• சந்தை ஆய்வுகளின் அடிப்படையில் சிறப்பான தீர்மானங்களை மேற்கொள்ளுவது எப்படி

• வாடிக்கையாளர்களின் உணர்வுபூர்வமான தேவைகளை நிறைவேற்றுவது எப்படி

• வாடிக்கையாளர்மீது முழு கவனத்தையும் குவிப்பது எப்படி

• போட்டிச் சூழலை உங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ளுவது எப்படி

• உங்கள் விநியோக அமைப்புமுறையை முழுமையாக உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவது எப்படி

• சந்தைப்படுத்துதல் கலையில் கைதேர்ந்தவராக ஆவது எப்படி

Ratings and reviews

4.5
2 reviews

About the author

Brian Tracy is an author, entrepreneur, public speaker and personal and professional development trainer from Canada. He is well known for The Phoenix Seminars: a seminar training program. Some of Tracy's famous reads include The Psychology of Selling: The Art of Closing Sales, Jones and The Salesman, Change Your Thinking, Change Your Life and The Ultimate Success Guide. 1944-born Tracy has also featured in media, including Huffington Post, Forbes and Business Magazine, as well as on channels such as FOX, NBC and CBS.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.