இந்த கதையின் தலைப்பே இந்தக் கதையைச் சொல்லிவிடும். வாழ்க்கையில் அனைவருமே ஏதாவது ஒரு தவறு செய்திருப்போம். அதேபோல் இந்த கதையின் நாயகன் ராஜாவும் தவறு செய்கிறான். அந்த தவறால் அவன் வாழ்வில் ஏற்படும் விளைவுகள், துன்பங்கள், அதை நாயகி எதிர்கொள்ளும் விதம்..., அதனால் அவர்கள் வாழ்வில் நடக்கும் குழப்பம்..., இதுதான் கதை.
ஒவ்வொரு பிரச்சனையையும் ஆண் அணுகும் விதம் ஒரு மாதிரியும், அதுவே பெண் அணுகும் விதம் வேறு மாதிரியும் இருக்கும். அப்படியாக நாயகன், நாயகி இருவரின் கண்ணோட்டத்தில் இந்த கதையை நீங்கள் காணலாம்.