Chrome என்பது விரைவான, பயன்படுத்துவதற்கு எளிதான மற்றும் பாதுகாப்பான இணைய உலாவியாகும். Androidக்காக வடிவமைக்கப்பட்ட Chromeமில் பிரத்தியேகச் செய்திக் கட்டுரைகள், உங்களுக்குப் பிடித்த வலைதளங்களுக்கான உடனடி இணைப்புகள், பதிவிறக்கங்கள், Google தேடல் மற்றும் உள்ளமைந்த Google மொழியாக்கம் ஆகியவை கிடைக்கின்றன. அனைத்துச் சாதனங்களிலும் உங்கள் மனதைக் கவரக்கூடிய Chrome இணைய உலாவியைப் பயன்படுத்திப் பார்க்க இப்போதே பதிவிறக்குங்கள்.
குறைவாக டைப் செய்து வேகமாக உலாவுங்கள். நீங்கள் டைப் செய்யும்போதே தோன்றும் பிரத்தியேகத் தேடல் முடிவுகளிலிருந்து தேர்வுசெய்யலாம், அத்துடன் முன்பு பார்வையிட்ட இணையப் பக்கங்களை விரைவாக உலாவலாம். தன்னிரப்பியைப் பயன்படுத்திப் படிவங்களை விரைவாக நிரப்பலாம்.
மறைநிலை உலாவல். உங்கள் 'வரலாறு' சேமிக்கப்படாமல் இணையத்தில் உலாவ 'மறைநிலைப் பயன்முறையைப்' பயன்படுத்தலாம். அனைத்துச் சாதனங்களிலும் தனிப்பட்ட முறையில் உலாவலாம்.
அனைத்துச் சாதனங்களிலும் Chromeமை ஒத்திசைத்தல். Chromeமில் உள்நுழையும்போது புக்மார்க்குகள், கடவுச்சொற்கள், அமைப்புகள் ஆகியவை அனைத்துச் சாதனங்களிலும் தானாகவே ஒத்திசைக்கப்படும். தடை எதுவுமின்றி மொபைலிலிருந்தோ டேப்லெட்டிலிருந்தோ லேப்டாப்பிலிருந்தோ உங்கள் தகவலை அணுகலாம்.
பிடித்தவை அனைத்தும் ஒரே தட்டலில். Google தேடலுக்கு மட்டும் Chrome விரைவானதாக இல்லாமல், உங்களுக்குப் பிடித்தவை அனைத்தும் ஒரே தட்டலில் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய 'தாவல்’ பக்கத்திலிருந்து நேரடியாக உங்களுக்குப் பிடித்த செய்தித் தளங்களையோ சமூக ஊடகத்தையோ தட்டலாம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்திலிருந்தே ஒரு சொல்லையோ சொற்றொடரையோ தட்டி Google தேடலைத் தொடங்கலாம்.
'Google பாதுகாப்பு உலாவல்' மூலம் மொபைலைப் பாதுகாத்தல். Chromeமில் 'Google பாதுகாப்பு உலாவல்' உள்ளமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தான வலைதளங்களுக்குச் செல்லவோ ஆபத்தான கோப்புகளைப் பதிவிறக்கவோ முயலும்போது எச்சரிக்கைகளைக் காட்டி உங்கள் மொபைலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
விரைவாகப் பதிவிறக்கலாம், இணையப் பக்கங்களையும் வீடியோக்களையும் ஆஃப்லைனில் பார்க்கலாம் Chromeமில் வீடியோக்களையும், படங்களையும், முழு இணையப் பக்கங்களையும் ஒரே தட்டலில் எளிதாகப் பதிவிறக்குவதற்கான பிரத்தியேகமான பட்டன் உள்ளது. அத்துடன் 'பதிவிறக்கங்கள் முகப்பும்' Chromeமில் உள்ளது. அதில் ஆஃப்லைனில் இருக்கும் போது கூட நீங்கள் பதிவிறக்கியவற்றை அணுகலாம்.
Google குரல் தேடல். உலாவியுடன் பேசும் அனுபவத்தை Chrome வழங்குகிறது! பயணத்தின்போது கைகளினால் உள்ளிடாமல் குரலைப் பயன்படுத்தி பதில்களைத் தேடலாம். எங்கேயும் எப்போதும் உங்கள் குரலைப் பயன்படுத்தி விரைவாக உலாவலாம், கண்டறியலாம்.
உள்ளமைந்த Google மொழியாக்கம்: முழு இணையப் பக்கங்களை விரைவாக மொழிபெயர்க்கலாம். இணையம் முழுவதையும் உங்கள் மொழியில் மொழிபெயர்க்க Chromeமில் 'Google மொழியாக்கம்' உள்ளமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்டான பிரத்தியேகப் பரிந்துரைகள். உங்கள் ஆர்வங்களின் அடிப்படையிலான அனுபவத்தை Chrome தருகிறது. புதிய தாவல் பக்கத்தில் உங்களின் முந்தைய உலாவல் வரலாற்றின் அடிப்படையில் Chrome தேர்ந்தெடுத்த செய்திக் கட்டுரைகள் காட்டப்படும்.
புதுப்பிக்கப்பட்டது:
22 ஜன., 2025