கல்கியின் பொன்னியின் செல்வன்

Bright Zoom
5.0
3 reviews
Ebook
1115
Pages
Ratings and reviews aren’t verified  Learn More

About this ebook

கல்கியின்

பொன்னியின் செல்வன் .!


நுழையும் முன் :  


பொன்னியின் செல்வன் உருவான வரலாறு அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புகழ்பெற்ற தமிழ் புதினமாகும். 1950-1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராகவும், தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. இக்காவியம் பண்டைய தமிழரின் பண்பாடும், அமரர் கல்கி அவர்களின் கற்பனை வளமும் ஒருங்கே இணைந்த அமுத கலவை போன்ற படைப்பு என்பதை நம்மால் உணர முடிகிறது. தமிழரின் போர்குணங்களையும், இறையாண்மையையும் அறிந்துகொள்ள நினைக்கும் இன்றைய இளைஞர்களையும் முந்தைய காலத்திற்கே கொண்டுசெல்லும் வண்ணம் காப்பியங்களை படைத்த பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், போன்ற படைப்புகள் படிக்க படிக்க திகட்டாதவை. கல்கி அவர்கள் எழுதிய சரித்திரக் காப்பியங்களில் சரித்திரத்திற்கு எவ்வளவு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கற்பனையின் பங்கு அதில் எவ்வளவு இருக்கிறது என்று பிரித்தறிய முடியாது என்பது அவரின் தனித்தன்மைக்கு சான்று. பல நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களின் துணைக் கொண்டு அவற்றின் அடிப்படை ஆதாரங்களிலிருந்து விலகிப் போகாமல் மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் ஒரு மாபெரும் சரித்திரக் காப்பியமாகப் பொன்னியின் செல்வனைப் படைத்திருக்கும் கல்கி அவர்கள் தமிழ் வாசகர்களுக்கும், தமிழுக்கும் கிடைத்த வரம் என்று சொன்னால் அது மிகையாகாது.


இந்த மாபெரும் சரித்திரக் காப்பியத்தில் உலாவரும் கதாபாத்திரங்களான சுந்தர சோழர், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை, செம்பியன் மாதேவி, வந்தியத்தேவன், அம்பில் அநிருத்தர், வானதி, நந்தினி, மணிமேகலை, பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், கந்தமாறன், ஆழ்வார்க்கடியான், குடந்தை சோதிடர், ரவிதாஸன்... இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை நம்மால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.


காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளாக மிகச் சிலருடையவையே இருக்கின்றன. கல்கியின் எழுத்துகளை அந்த வரிசையில் முதல் இடத்தில் வைத்துப் போற்றலாம். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவைகளைச் சுற்றித் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்க விட்டு, அந்தக் கற்பனையை அப்படியே தன் எழுத்தில் வடித்திருக்கும் கல்கி அவர்களின் இந்தக் காப்பியம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை இதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள். படித்தவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை இது. எத்தனை முறை படித்தாலும் புதிதாக அப்பொழுது தான் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும் இன்நூலின் முதல் பாகம் - புது வெள்ளம்த்தில் ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாயங்களையும் தொகுத்து நூல் வடிவில் தந்துள்ளேன் இதை வாங்கி படித்து பயனடையுங்கள்..!

புத்தக வெளியீடு : Bright Zoom

ஆசிரியர் : Jakkir Hussain. 

Ratings and reviews

5.0
3 reviews
Bright Zoom
September 25, 2022
நாடு பேறும் நல்ல நூல்..! படிக்க படிக்க பரவசம்..! பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது. முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும்
Did you find this helpful?
Dravid Raj
October 11, 2022
Very good novel 😀😀😀😀
Did you find this helpful?

About the author

Bright Zoom Jakkir Hussain 

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.