நாவலின் ஊடாக, தான் சொல்ல வந்ததைத் தெளிவாகவும், எளிமையாகவும், புரிந்து கொள்ளச் சிக்கல் இல்லாமலும், அதேசமயம் நாவல் கட்டமைப்பில் நிறையச் சிக்கல்களை உள்ளடக்கியும் வடிவமைப்பவர் கோட்டயம் புஷ்பநாத். இதிலும் அவருடைய அந்த வழக்கமான பாணியை நீங்கள் தரிசிக்கலாம்.
முற்றிலும் பொழுதுபோக்கு என்பதே அவரது நாவல்களின் அடிநாதம். அதில் பிரமிப்பு ஊட்டும் காட்சிகள் மற்றும் வார்த்தை அமைப்புகள் நாவல் வாசிப்பவரை 'வாசிப்பு உலகுக்குள்’ முற்றிலுமாக ஆழ்த்திவிடும் அவரது பாணி.
ஆண்-பெண் வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பு வாசகர்களும் இவரது நாவல்களை விரும்பி வாசிக்கின்றனர்.
கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக அவரது நாவல்கள் மூலமாக என் மொழிபெயர்ப்புக்குத் தமிழக வாசகப் பெருமக்கள் அளித்துள்ள உற்சாகமும் வரவேற்பும் மறக்க முடியாத ஒன்று. அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகின்றன.
சிவன்