சங்க இலக்கியங்களில் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு மூன்று தமிழ் மன்னர்களின் தலைநகரங்களைப் பற்றியும் தனித்தனியே மூன்று நாவல்கள் எழுத வேண்டும் என்ற திரு. நா. பார்த்தசாரதியின் திட்டப்படி மூன்றாவது நாவல் இது. ‘மணி பல்லவம்’ சோழப் பேரரசின் தலைநகரைப்பற்றிப் பேசுகிறது. பாண்டியர்களின் பழம்பெரு நகரான ‘கபாடபுரம்’ இரண்டாவது நாவலாக உருப்பெற்று விட்டது. கடல் பிறக் கோட்டிய சேரர் பெருமான் செங்குட்டுவனின் காலச்சூழ்நிலையை விளக்குகிறது இந்த ‘வஞ்சிமாநகரம்’.