தம்பதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள்.
அக்ஷித்தின் மனைவியாகிய வருணாராணி ஒரு திருமண விழாவிற்காக தாய்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறாள்.
மனைவி அருகில் இல்லாத தனிமையில், கள்ளக்காதலில் ஈடுபடுகிறான் அக்ஷித். அந்தக் கள்ளக்காதல் அவனை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்த, மனைவிக்கு உண்மை தெரியவரும்போது மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அவன் படும் அவஸ்தைகளை காட்சிக்குக் காட்சி வருணிப்பதே கதை.
கணவன் எத்தனை கெட்டவனாக இருந்தாலும், நம்பிக்கைத் துரோகியாக இருந்தாலும், இறுதியில் மன்னித்து ஏற்றுக்கொள்வது தானே பெரும்பாலான பெண்களின் இயல்பு.
சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கிய அக்ஷித் திருந்தினானா? வருணா அவனை ஏற்றுக்கொண்டாளா? கதைக்குள் சென்று காண்போம்.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.