The Day I Became A Woman

· Pustaka Digital Media
5.0
1 ግምገማ
ኢ-መጽሐፍ
55
ገጾች
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት

ስለዚህ ኢ-መጽሐፍ

மெக்மல்பஃப் அற்புதமான படங்கள் தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார். மார்ஸீ இவரின் மனைவி. இவரின் குடும்பத்தில் அனைவரும் திரைத்துறையை சேர்ந்தவர்களே. திரைக்களஞ்சிய குடும்பம்.

மெக்மல் பஃப் தன்னுடைய 17-வது வயதில் ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவர். பின்னர் ஈரானில் நடந்த புரட்சியின் காரணமாக மன்னராட்சி தூக்கி எறியப்பட்டபோது, இவரது தண்டனையும் தூக்கி எறியப்பட்டதில், இயக்குநராகி விட்டவர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக விருதுகள் பெற்றிருப்பவர். கப்பா, கந்தஹார், சைக்ளிஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர்.

மார்ஸீ மெஸ்கினி 1969-ல் தெஹ்ரானில் பிறந்தார். இவர் அடிப்படையில் ஒரு கேமராவுமன். இந்த படத்தை அவரின் கணவர் மொஷென் மெக்மல் பஃப் ஸ்கிரிப்ட் எழுதி, தயாரித்து, இயக்கத்தில் மேற்பார்வை செய்ய, மார்ஸீ மெஸ்கினி இயக்கினார். இந்த படம் 2009-ல் வெளியானது.

பெண்மையின் ஆழ்மனவுலக குறியீடாய் இந்த திரைக்கதை சிருஷ்டி கொண்டிருக்கிறது. இதில் மூன்று கதை சொல்லப்படுகிறது. ஒரு பதின்பருவ சிறுமி, திருமணமான இளம்பெண், மூதாட்டி ஆகிய மூவரின் கதை அதில் இடம் பெறுகிறது. அவர்கள் கதை முடிவில் ஆர்ப்பரிக்கும் கடற்கரையோரம் யதேச்சையாய் சந்திக்கிறார்கள். அந்த மூவரும் நேர்கோட்டில் ஒன்றாகையில், ஒரு சமுதாயத்தின் சமன் கொண்ட ஒட்டு மொத்த பெண்ணியத்தின் குறியீடாகிறார்கள்.

இவரின் சைக்கிளிஸ்ட் திரைப்படம். தாஸ்தாயெவ்ஸ்கியின் கேம்ப்ளர் கதைக்கு நிகரானது. அதில் வரும் மைய கதாபாத்திரத்தை எத்தனை நுட்பமாய் நூலிழை பிசகாத நுட்பத்தோடும், நடுவுநிலையோடும் சித்தரித்திருப்பாரோ, அதேபோல சைக்கிளிஸ்ட் படத்தின் மைய கதாபாத்திரம் அபாரமாய் உணர்வின் மொழியால் செதுக்கப் பட்டிருக்கும். வழக்கமான நாயக சிருஷ்டிப்பின் சூத்திரத்தை பின்பற்றாமல் உண்மையின் அடியாழத்திற்கு போய், நேர்மையோடும், மனோத்த்துவ பார்வையோடும், துல்லியமாய் சிருஷ்டித்திருப்பார்.

அப்படி தான் இந்த திரைக்கதையில் வரும் மூன்று மைய கதாபாத்திரங்களையும் கூட செதுக்கியிருக்கிறார்.

ደረጃዎች እና ግምገማዎች

5.0
1 ግምገማ

ስለደራሲው

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ለዚህ ኢ-መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የንባብ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎን ድር አሳሽ ተጠቅመው በGoogle Play ላይ የተገዙ ኦዲዮ መጽሐፍትን ማዳመጥ ይችላሉ።
ኢሪደሮች እና ሌሎች መሳሪያዎች
እንደ Kobo ኢ-አንባቢዎች ባሉ ኢ-ቀለም መሣሪያዎች ላይ ለማንበብ ፋይል አውርደው ወደ መሣሪያዎ ማስተላለፍ ይኖርብዎታል። ፋይሎቹን ወደሚደገፉ ኢ-አንባቢዎች ለማስተላለፍ ዝርዝር የእገዛ ማዕከል መመሪያዎቹን ይከተሉ።