திஸ் இஸ் நாட் எ ஃபில்ம், டாக்சி, தி சர்கிள், க்ளோஸ்ட் கர்டெய்ன், க்ரிம்ஷான் கோல்ட், மை தெஹ்ரான் ஃபார் ஷேல், வொய்ட் பலூன், ஆஃப்சைட், மிரர் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இதில் மற்றொரு புதிய உத்தியை கையில் எடுத்து, இந்த டாக்சி திரைக்கதையை படமாக்கி, ரகசியமாக வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் திரையிட அனுப்பி வைக்க, இப்போது பெர்லின் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் தங்க கரடி விருதை தட்டிக்கொண்டு வந்திருக்கிறது.
எப்படி இந்த டாக்சி படத்தை எடுத்தார். அவர் தான் டாக்சியின் ட்ரெய்வர். அவருடைய டாக்சியில் அவர் சில இடங்களில் டேஷ்போர்ட் முதலான இடங்களில் சிறிய கேமராக்களை மறைவாக பொருத்தி வைத்து, உள்ளிருந்து வெளியே தெரிவதையும், தெரிபவர்களையும், உள்ளே இருப்பவர்களை பதிவு செய்ய மேலும் சில கேமராக்களையும் பொருத்தி விட்டார்.
அவரின் ஒரு ஒன்றரை மணி நேர பயணத்தை, அந்த டாக்சியின் பார்வையிலேயே சொல்லியிருப்பார். தற்காலத்தில் விதவிதமான கேமராக்கள் வந்து விட்டன. கோப்ரோ என்கிற சிறிய கேமரா தண்ணீருக்குள் எல்லாம் சுளுவாய் எடுத்து விடுகிறது. குறைந்த விலையில் கிடைக்கிற ஆஸ்மா-ரா என்கிற கேமராவில் முழுப் படமும் எடுத்து விடலாம். அது 360 டிகிரி எல்லா பக்கமும் நொடிப்பதற்குள் ரிமோட் மூலம் திருப்பக் கூடிய விதத்தில் கைக்கடக்கமாய் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அப்படி பொருத்தப்பட்ட கேமராக்களில், ஆறு நாட்களில் படம் பிடிக்கப்பட்ட திரைக்காவியமே டாக்சி.
வழியில் அந்த டாக்சியில் ஏறும் பயணியர்களோடு பனாஹி நிகழ்த்தும் இயல்பான சம்பாஷணைகளிலேயே இன்றைய ஈரானிய சமூக சூழலை கவித்துவத்துடன் பதிவு செய்வதோடு, சிறப்பு ஒலியின் மூலமே அற்புதமான பதைபதைக்கிற ஒரு உச்சகட்ட காட்சியையும் உருவாக்குவதென்பது, பனாஹியால் தான் எடுக்க முடியும் என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
ஜாஃபர் பனாஹி எனும் திரைக்கலைஞன் வாழும் காலத்தில் வாழும் பேரு பெற்றிருப்பதை வாழ்வின் வரமென பித்தேறிய பரவசத்துடன் சொல்லித் திரிய வைக்கிறது அவரின் கலைத்தாகம்.
இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.
டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.
குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.
திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.