அவளிடம் காணமுடியாத ஆதரவு, அரவணைப்பு, பாராட்டு இவற்றைப் பரிந்தளித்த தானே இன்னொருத்தியாக இருக்க, + இன்னொருத்திபால் அவருடைய ஆசை படருமோ என்று சந்தேகித்த நடனமணி அம்பிகா.
பெண்கள் பற்றிய சைக்காலஜியை முழுக்க முழுக்க அறிந்து வைத்திருக்கும் அருமை நண்பர் மற்றொரு காலேஜ் புரபசர் ஆனந்தராஜ். இவர் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி!
பசிக்கும்போது தனக்கென்று ஒரு பிளேட் ஆர்டர் கொடுக்காமல், இன்னொருவர் பிளேட்டில் இருக்கும் பதார்த்தத்தைப் பார்த்துப் பார்த்தே பசி தீர்த்துக்கொள்ள முடியுமாம். அப்படியும் பசி அடங்காதபோது கற்பனையிலேயே பசி தீர்த்துக் கொள்வாளாம்.
இப்படி ஒரு புதுக் காதல் வேதம் சிருஷ்டிக்கும் கல்பனா.
தகாத காதலுக்குப் புது நியாயம் கற்பித்துப் பரவசமூட்டும் அதிதிறமைசாலியாக விளங்குகிறாள் கல்பனா.
இத்தனைப் பேருக்கு மத்தியில் கிளைக்குக்கிளைதாவும் அர்ச்சுனன் மகாரானாக அவதரிக்கும் விஜயன்.
இந்தக் கற்பனைப் பாத்திரங்களுக்கு நிஜத்தன்மை சேர்ப்பதற்காக கமல்ஹாசன் முதல் கவிஞர் வைரமுத்து வரை நடமாடும் பாத்திரங்களையும் சேர்த்துக் கையாளும் இலாவகமான புதிய நாவல் உத்தி.
மோகம் மோகனம் பாடும் இந்தக் கதையில் கல்பனா வரும்போது மட்டுமல்லாமல் காது முழுவதுமே ஒரு கிளுகிளுப்பு தோன்றி விரவிக் கிடக்கிறது.
சிவசங்கரியின் வெற்றிப் படிகளில் இந்த நாவல் ஒரு படி!