விருதுநகரைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. எழுத்து மீதான ஆர்வத்தில் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர், எழுத்தாளர், மனவள ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
ஆனந்த விகடன் குழுமத்தில் வெளியான, ‘மந்திரச்சொல்’, ‘ஞானகுரு’ தொடர்கள் மூலம் பிரபலமாகி, இதுவரை 50க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது பெரும்பாலான புத்தகங்கள், வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை வழிகாட்டிகள். மனிதர்கள், எதை இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது என்பதைத்தான், தன்னுடைய புத்தகங்கள் மூலம் கற்பித்துவருகிறார்.
பத்திரிகை ஆசிரியராக இருப்பதால், சுருக்கமான வார்த்தைகளில் அதிக விறுவிறுப்பு தருவது இவரது தனிச்சிறப்பு. தன்னம்பிக்கை மட்டுமின்றி காதல், ஆன்மிகம், திகில் கதைகள் படைப்பதிலும் பெருவிருப்பம் கொண்டவர். மனித குலத்திற்கான வழிகாட்டிகள் என கெளதமபுத்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தியை கொண்டாடுபவர். தன்னுடைய எழுத்துகள் ஏதேனும் ஒரு வகையில், படிப்பவருக்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்ற அக்கறையுடன் தொடர்ந்து எழுதி வருபவர்.