வெண்ணிமலை கிராமத்தில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு நாட்டியப்போட்டி நடப்பது வழக்கம். இந்த நாட்டியப் போட்டியில் வெற்றி பெற்றால் கிடைப்பது வெறும் பரிசும், பொன்னாடையும் மட்டுமல்ல; வெற்றி பெற்ற நாட்டியத்தாரகை தனது வாழ்நாள் முழுவதுக்குமான செல்வத்தையும் பெறுவாள். சில சமயம் அது அவளது தலைமுறைக்கே கூடப் போதுமானதாக இருக்கும்! இந்த போட்டியில் வெற்றி பெற, கல்லையும் நடனமாட செய்யும் நாக சலங்கையை கைப்பற்ற மகேந்திரன் பட்டதிரியும், ஜயதேவனும் மேற்கண்ட முயற்சிகளையும், மோகினிகளின் பல அமானுஷ்ய கதைகளையும், பல மந்திர ஜாலங்களையும், தேவலோக நாக சலங்கையை கைபற்றி, யார் வெற்றி பெற்றது என்பதையும் கதையை வாசித்து அறியலாம்.