Mossad (Tamil)

· Manjul Publishing
1.0
2 समीक्षाएं
ई-बुक
520
पेज
रेटिंग और समीक्षाओं की पुष्टि नहीं हुई है  ज़्यादा जानें

इस ई-बुक के बारे में जानकारी

இஸ்ரேலின் இரகசியப் பாதுகாப்பு அமைப்பான ‘மொசாட்’தான் உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்பு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓர் உண்மையாகும். அந்த அமைப்பின் அறுபதாண்டுகால வரலாற்றில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து மேற்கொண்ட, மிகவும் ஆபத்தான, நம்புதற்கரிய, மயிர்க்கூச்செறிய வைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளை அப்படியே தத்ரூபமாக விவரிக்கின்ற இந்நூல், அவை தொடர்பாகத் திரைக்குப் பின்னால் நிகழ்ந்த சம்பவங்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கொடூரமான நாஜி கொலைகாரன் அடால்ஃப் ஐக்மேனின் கடத்தலில் தொடங்கி, சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய ஈரானிய அணுசக்தி அறிவியலறிஞர்களின் களையெடுப்புவரை, இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள, அசாத்தியமான உண்மைக் கதைகள், ஹாலிவுட் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்ற அதிரடி சாகசக் கதைகளை விஞ்சி நிற்கின்றன. சர்வதேச உளவு, இரகசியப் புலனாய்வு, திரைமறைவுப் போர்கள் போன்றவை உங்களுக்குக் குதூகலமும் பிரமிப்பும் ஊட்டும் என்றால், இப்புத்தகம் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என்பது உறுதி.

रेटिंग और समीक्षाएं

1.0
2 समीक्षाएं

लेखक के बारे में

மைக்கேல் பார்-ஜோகர், நான்கு இஸ்ரேல்-அரபுப் போர்களில் பங்கேற்றவர். இஸ்ரேலைத் தோற்றுவித்த டேவிட் பென் குரியனுடன் தோளோடு தோள் நின்று போரிட்டவர் அவர். அவர் இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஆதரவாளரும்கூட. அவர் இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

நிசிம் நிஷால் இஸ்ரேலின் மிகப் பிரபலமான தொலைக்காட்சி ஆளுமைகளில் ஒருவர். அவர் இஸ்ரேலிய அரசுத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இஸ்ரேலின் வரலாற்றைப் பற்றிய பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அதோடு, வேறொருவருடன் இணைந்து, யூத மதத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றைப் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.

इस ई-बुक को रेटिंग दें

हमें अपनी राय बताएं.

पठन जानकारी

स्मार्टफ़ोन और टैबलेट
Android और iPad/iPhone के लिए Google Play किताबें ऐप्लिकेशन इंस्टॉल करें. यह आपके खाते के साथ अपने आप सिंक हो जाता है और आपको कहीं भी ऑनलाइन या ऑफ़लाइन पढ़ने की सुविधा देता है.
लैपटॉप और कंप्यूटर
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.