Anthareen

· Pustaka Digital Media
इ-पुस्तक
106
पृष्ठहरू
रेटिङ र रिभ्यूहरूको पुष्टि गरिएको हुँदैन  थप जान्नुहोस्

यो इ-पुस्तकका बारेमा

அவன் ஒரு அற்புதமான கலைஞன். அவனை யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட. அவனின் எழுத்துக்கள் அபூர்வமானவை. அளவானவை. அதை படித்திருந்தவர்கள் அளவானவர்கள். ஜனசமுத்திரத்தில் அவர்கள் அங்கொன்றும்இங்கொன்றுமாய் அடையாளமற்று அவனைப்போல கரைந்து போயிருப்பவர்கள்.

அவன் தன்னை இந்த ஜனத்திரள் முன் இந்த அதிகார வர்க்கத்தின் முன் இந்த அளவீடுகளின் முன் இந்த தீர்மானிக்கும் சக்தி மையங்களின் முன் எழுத்தாளனாக காட்டிக்கொள்ள விரும்பியதில்லை. ஆனாலும் அவன் ஒரு அப்பழுக்கற்ற அதிதீவிரமான எழுத்துக்களை படைத்தும், படைத்துக்கொண்டும் இருந்தான். தனிமையும், வறுமையும், விதைக்கப்பட்ட விரக்தியும் அவனின் இருப்பை அரித்தெடுத்து ருசித்துக்கொண்டிருந்தது. அவன் அவனின் படைப்புலகிற்குள் ஒதுங்கிப்போய் தனதான இருப்பை இல்லாமல் ஆக்கிக்கொண்டு இருப்பவனாய் இருக்கிறான்.

காலவிளையாட்டு அவனை சுழற்றியடிக்கிறது. அவன் காலத்தை சுழற்றிவிட தன் கனவுலகில் படைத்தெடுக்கும் படைப்புகளை ஆயுதமாக்குகிறான். காதலை துரத்துபவன் கண்ணுக்குத் தெரியாத உலகில் துரத்தப்படுவனாக இருந்திருக்கிறான் என்பது ஒரு நிசப்தமௌனப்புள்ளியில் செவி கடந்த குரலின் ஆத்மாவினால் பதிவு செய்யப்படுகிறது.

சதாத் உசேன் மாந்த்தோ எழுதிய சிறுகதை மூலமாக கொண்டு மிருணாள் சென் எழுதிய திரைக்கதையை அடியற்றி படைக்கப்பட்ட நாவல் இது. ஆந்த்தரீன் என்றால் ஒடுங்கிப் போன அல்லது ஒடுங்கிப் போன அல்லது ஒடுங்கிப் போக நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆத்மா என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். அப்படிப் பார்க்கையில் இது ஒடுங்கிப் போன ஒரு ஆத்மா அந்த ஆத்மாவிற்குள் அதைப்போல் உள்ள இன்னொரு ஆத்மா என அதன் வலிகளை துளித்துளியாய் தொட்டு கவிதையாக்கியிருக்கும் கதை இது.

लेखकको बारेमा

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

यो इ-पुस्तकको मूल्याङ्कन गर्नुहोस्

हामीलाई आफ्नो धारणा बताउनुहोस्।

जानकारी पढ्दै

स्मार्टफोन तथा ट्याबलेटहरू
AndroidiPad/iPhone का लागि Google Play किताब एप को इन्स्टल गर्नुहोस्। यो तपाईंको खातासॅंग स्वतः सिंक हुन्छ र तपाईं अनलाइन वा अफलाइन जहाँ भए पनि अध्ययन गर्न दिन्छ।
ल्यापटप तथा कम्प्युटरहरू
तपाईं Google Play मा खरिद गरिएको अडियोबुक आफ्नो कम्प्युटरको वेब ब्राउजर प्रयोग गरेर सुन्न सक्नुहुन्छ।
eReaders र अन्य उपकरणहरू
Kobo eReaders जस्ता e-ink डिभाइसहरूमा फाइल पढ्न तपाईंले फाइल डाउनलोड गरेर उक्त फाइल आफ्नो डिभाइसमा ट्रान्स्फर गर्नु पर्ने हुन्छ। ती फाइलहरू पढ्न मिल्ने इबुक रिडरहरूमा ती फाइलहरू ट्रान्स्फर गर्नेसम्बन्धी विस्तृत निर्देशनहरू प्राप्त गर्न मद्दत केन्द्र मा जानुहोस्।