ராதிகா, ஷோபா, சங்கர், பாலமுரளி இவர்கள் நாலு பேருக்குள்ளும் நடக்கும் கதையே இது. சங்கர் மற்றும் பாலமுரளி இவர்கள் இருவருமே ராதிகாவை காதலிக்கிறார்கள், இவர்கள் இருவரும் மறந்தும் கூட ஷோபாவை நினைக்கவில்லை. ஆனால், ராதிகாவின் மனதில் இருபது யார்? ராதிகாவிற்கும் சங்கருக்கும் திருமணம் முடிவானதை ஏற்றுக் கொள்ளாத பாலமுரளி, ராதிகாவை கடத்தி சென்று அவளை நாசமாக்கியும் விட்டான். இனி ராதிகாவின் நிலை என்ன? பாலமுரளியின் சபதம் என்ன? வாசிப்பை தொடருவோம் பாகம் இரண்டில்...
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.
15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.