Ramachandra Trilogy

Latest release: March 25, 2022
Historical · Arthurian · Literary
Series
3
Audiobooks

About this audiobook series

பிரிவினையால் பாழ்பட்டுக் கிடக்கிறது அயோத்யா. யுத்தத்தின் கொடூரம் அதன் உயிர்ச்சக்தியை உறிஞ்சியெடுத்துவிட்டது. ஆழமா ஊடுருவியுள்ளது, இச்சிதைவு. தோற்றோர் மீது ஆட்சியைச் சுமத்தவில்லை அரக்க மன்னன், இலங்கை மன்னன் இராவணன். இல்லை; வர்த்தகத்தைச் சுமத்துகிறான். சாம்ராஜ்யத்தினின்று செல்வம் வாரியெடுத்துச் செல்லப்படுகிறது; ஏழ்மை, ஊழல், மனச்சோர்வு எனத் துன்புறுகின்றனர், சப்தசிந்து மக்கள். கொடும் புதைகுழியான இந்த வாழ்க்கையினின்று மீட்க ஒரு தலைவன் வர மாட்டானா எனக் கதறுகின்றனர். அவர்கள் தேடும் தலைவன், அவர்களிடையேதான் இருக்கிறான் என்பதை உணர்ந்தவர் யாருமில்லை. அவனை அவர்கள் அறிவர். சமூகம் விரட்டியடித்த புண்பட்ட இளவரசன். அவர்கள் உடைக்க முயன்ற இளங்கோ. இராமன். சமூகம் சுமத்தும் அவக்கேட்டை மீறி உயர முடியுமா இராமனால்? சீதாவின் மீதுள்ள காதல், ஆழிப்பேரலையா மூழ்கடிக்கப் போகும் போராட்டத்தினின்று மீட்குமா? இளம்பருவத்தை இரக்கமின்றி அழித்த அரக்க மன்னன் இராவணனை வீழ்த்த முடியுமா அவனால்? அமீஷின் புத்தம்புதிய இராமச்சந்திரா தொகுதியுடன் இதோ - ஒரு அபார பயணத்திற்குத் தயாராகுங்கள்.