ஒருவர் தொடங்கும் துரோகம் அடுத்தடுத்தவர்களையும் பற்றிக் கொண்டு தொடர்ச்சியாக முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கும். கடத்தல் தொழிலில் ஈடுபடும் வாசுதேவனைக் காட்டி கொடுக்க அவனிடம் வேலை செய்யும் லாரன்ஸ் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொள்ள அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கிறது. போலீஸ் அதிகாரி குபேர் வாசுதேவனின் நண்பன் என்று லாரன்ஸ்க்குத் தெரியாமல் போனது அவனின் உயிரையே எடுத்துவிடுகிறது. லாரன்ஸ் தந்தை ஹார்ட் அட்டாக்கில் இறந்து போக அந்த அதிர்ச்சியே அவனின் தாயையும் காவு வாங்கிவிடுகிறது. லாரன்ஸின் மனைவியைக் கடத்தி வந்த வாசுதேவன் நண்பன் வீட்டில் அவளை வைத்திருக்க, அவளும் கொல்லப்படுகிறார் அந்த உண்மை வாசுதேவனுக்குத் தெரியாமல் அவனின் நண்பன் மறைத்துவிடுகிறான். திடீரென குபேர் கொலை செய்யப்படுகிறார். அடுத்து வாசுதேவனும் கொல்லப்படுகிறான். வாசுதேவனின் தொழில் நண்பர்களான நால்வர் தான் குபேரனையும் வாசுதேவனையும் கொன்று லாரன்ஸ் மனைவி தான் பழிவாங்கி இருப்பாள் என்ற பிம்பத்தை அவரின் மகனிடம் உண்டாக்கிவிடுகின்றனர்.