ஊரை மிரட்டி ரவுடித்தனம் செய்து "உடையவர்களை" மிரட்டி பணம் சம்பாதிக்கும் கருப்பு, ஊர் வம்புக்காரி, வாயாடி, கருப்பின் மனைவி வள்ளியம்மை. சோமு என்கிற குழந்தை. சோமு தன் தந்தையின் போக்கால் அவனுக்கு ஏற்பட்ட கலங்கத்தை அவன் கனவுகளாலும்,செயல்களாலும் விலக்கி, சோமசுந்தர முதலியாராகி, ஊரில் முக்கியப் பிரமுகராகி, பின்னர் சோமுப்பண்டாரமாய் இறந்ததைப் பற்றி ஒரு நேர்த்தியான வரலாறு. மனிதனுக்கு கடவுள் என்பவன் ஒன்றள்ள, உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரைக்கும், ஒவ்வொறு நொடிக்கும் ஒரு கடவுள் உண்டு. இனி வரும் ஒவ்வொரு நொடிகளும் இன்னும் புதுப்புதுப் கடவுள்கள் தோன்றுவார்கள் என்று தத்துவார்த்த மனநிலையை அடையும் சோமுப்பண்டாரம், தன் வாழ்நாளில் பணம், புகழ், கள்ள உறவுகள், துரோகம், நன்றி, துறவு என்று வாழ்வின் எல்லா நிலையையும் அடையும் எதார்த்த வாழ்வை காட்டும் நாவல்.