மெருகேற்றப்பட்ட உறவுகளின் புனிதங்களை உடைத்தெறிய முயன்ற முயற்சி. சக்களத்தியை நோக்கிய கூரான கேள்விகள், மாவீரனாக எண்ணியிருந்த கணவனை நோக்கிய சீண்டல்கள், அண்ணனின் மீதான கோபம் என புத்திரனை இழந்த தாய் பரிதவிப்பில் சென்ற தூரங்கள்.நியதியின் பேரியக்கம் மனிதர்களையும் அண்ட வெளியையும் இயற்கையிலுள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்திருக்கிறது . அதில் ஒரு சிறு துளியைக்கூட மனித மனம் அறிய முடியாது. அதை மாற்றிவிடலாம் என்று நம் அகங்காரம் சில சமயம் கூறும். அதன்படி நாம் இயங்குவோம். பிறகு தெரியும் நமது அந்த இயக்கம்கூட நியதியின் விளையாட்டுதான் என்று. மஹாபாரதத்தில் நாம் அறிந்த கதையை அறியாத கோணத்தில் சொல்லும் ஒரு கதை .