ஒருபுறம் பழங்குடியினர் இனத்தில் பிறந்து இடம் தவறி குருகுலம் செல்லும் பையன் அங்கேயே படித்து, சிவில் சர்வீஸ் முடித்து பணிக்குச் சேருகிறான். அதிகாரியானாலும் தன் இனத்தாலும் இட ஒதுக்கீட்டின் காரணத்தால் பணிக்கு வந்தமையாலும் அவன் பதவிக்கு ஏற்ற மரியாதையுடன் நடத்தப்படவில்லை. மறுபுறம் அதிகாரியின் தாய் என்பதையும் தாண்டி நகர் வாசத்தில் ஒன்ற விரும்பமில்லாத, பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு வாழும் அவனது பாசமிக்க பழங்குடி அம்மா. இவர்களுக்கு நடுவில் சாதாரண அரசாங்கப் பணியாளரான நடுத்தர வர்க்கத்து பெண் ஐஏஎஸ் தகுதிக்காக பழங்குடி அதிகாரியை மணமுடித்து தெருவில் பிச்சை எடுக்கும் மாமியாரின் மருமகளாகிறாள். இவ்வாறாக மூன்று உணர்வுப் பூர்வமான சிக்கல்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஓர் உண்மை கதை.