மாந்திரீக நாவல்களின் வரிசையில் கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு படைப்பு மோகினி கோயில். மும்பை நகரத்திலிருந்து வெளிவரும் மலையாள மாத இதழான "சேல்ஸ் டாக்ஸ்" பத்திரிகையில் 27 மாதங்கள் "யக்ஷிக்காவு" என்ற பெயரில் வெளிவந்த நாவல். பேய், பிசாசு, மோகினி என்றால் அனைவரும் பயப்படுவதுண்டு. இக்கதையில் சற்று நேர்மாறாக மோகினியான தேவசேனையின் உதவியுடன் கோவிந்தன் குட்டி என்னும் இளைஞன் எவ்வாறு நன்மை பெறுகிறான் என்பது பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் கூறப்பட்டுள்ளது. மாந்திரீக சக்தி தெய்வீக சக்திக்கு முன்னால் செயலற்று போகும் என்பதை பல திகிலூட்டும் சம்பவங்களுடன் விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது இக்கதை.
Müsteeriumid ja põnevusromaanid