"தீவிரவாதம், நவீன யுகத்தின் புற்றுநோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா முதல் ஐ.எஸ். வரை ஏராளமான இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்குப் பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆள்களும் பணமும் கிடைக்கும் வழியென்ன? தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் எவ்வாறு செயல்படுகிறது? ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை? பேரழிவுச் சம்பவங்களை எப்படித் திட்டமிடுகிறார்கள்? எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள்? தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது? ஆறு ஆண்டுக்கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது மாயவலை."