இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர் நாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள்.