இது ஒரு கிராமத்து காதல் கதை! ஒரு கள்ளனுக்கும், ஊரின் பெரும் புள்ளியின் மகளான ரோஜா என்பவளுக்கும் இடையில் உருவாகும் காதலே இதில் பிரதானம். இந்த கள்ளன் எதையும் திருட முடிந்தவன். உன்னால் என் இதயத்தை மட்டும் திருடவே முடியாது என்கிறாள் ரோஜா. கள்ளனோ திருடிக்காட்டுகிறான். காதல் மட்டுமல்ல, நினைத்து பார்க்கமுடியாத திடுக்கிடும் சம்பவங்களும் மிகுந்த ஒரு பரபரப்பு புதினம் " தேவர் கோவில் ரோஜா".