அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள். செல்வச்செழிப்பான குடும்பத்துக்கு ஒரு லாரி, பல குடும்பங்களுக்கு வைரங்கள், இன்னும் சில குடும்பங்களுக்கு புதிதாய் கட்டிக் குடிபோன வீடு, தொழில் என்று ஏதோ ஒன்று அழகாகவோ ஆசையாகவோ உள்ளே வந்து மொத்தக் குடும்பத்தையும் சுருட்டி நெரித்து அழித்துவிடுகின்றது. அழகில் ஆரம்பித்து அழிவில் சென்று முடிந்த ஆபத்தான டார்த்தீனியத்தின் கதை.