சர்வவல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மைநாயகர்கள் ஜுலியஸ் ஸீஸரையும், மார்க் ஆன்ட்டனியையும் தன்சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள். காலம்காலமாகத் தொடரும் இந்தப் பொது ஜனபிம்பத்தை ஆதார பூர்வமாக எஸ். எல். வி. மூர்த்தி உடைத்தெறிகிறார். அவர் நிலைநிறுத்தும் கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் புலமை, கணிதம், வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், ரசவாதம் ஆகியதுறைகளில் தேர்ச்சி, நாடாளும் நிர்வாகத் திறமை, படை நடத்தும் ஆளுமை எனச் சகலாவல்லவர். துணிச்சலின் அவதாரம். தன்மானம் பாதிக்கப்பட்ட வேளையில் தயங்காமல் மரணத்தைத் தழுவிய இரும்புப் பெண்மணி. ஜூலியஸ்ஸீஸர், நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என எஸ். எல். வி. மூர்த்தி உருவாக்கியிருக்கும் சரித்திரநாயகர்கள் வரலாற்று வரிசையில் ஐந்தாம் படைப்பு. குதிரைப்பாய்ச்சல்நடை. வரிக்குவரி சுவாரஸ்யம்.
Szórakoztató és szépirodalom