அம்மாவையும் ,ஐந்து சகோதரிகளையும் காப்பாற்றுவதற்காக கார் டிரைவராக பணியாற்றுகிறான் ஜயன். அவன் முதலாளியே ஜயனின் மீது பொய் குற்றம் சாட்ட, தூக்குதண்டனை கைதியாகி சிறைக்கு செல்கிறான். ஜயன் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காக சிறையில் இருந்து தப்பித்து, காவல்துறையினரிடம் அகப்படாமல் தான் நிரபராதி என்று ஊர்ஜிதம் செய்ய எடுக்கும் முயற்சிகளே பதிலுக்கு பதில்.