2020இல் பெருமாள் முருகனால் பதின்பருவத்தினர் பற்றி எழுதப்பட்ட மாயம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது இக்கதை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள் இருப்பினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகு இயல்போடு காட்சிப்படுத்தியிருப்பதுவாசகருக்கு நல்ல அனுபவத்தை வழங்குகிறது. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல புனையப்பட்ட இருபது கதைகளில் ஒன்று இது. ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம்! அந்த எறும்பு வரிசைக் கதைகளில் ஒன்று தான் இது.
Skönlitteratur och litteratur