அதி விரிவான அல்ட்ரா எச்.டி (4K) க்ராபிக்ஸில் வெர்ஷன் விலையாட்டுகள்
நீண்ட நாட்களாக காத்திருந்த பிரபலமான அதிரடி/தந்திர விளையாட்டின் அடுத்த பாகத்திற்கு வருக! ஏராளமான புதிய ஆயுதங்கள், நிலப்பரப்புகள், மற்றும் விருப்பங்கள்! இப்போது ஒவ்வொரு விளையாட்டும் இன்னும் சக்திவாய்ந்ததாக மற்றும் அற்புதமானதாக.
விளையாட்டின் கரு இப்போதும் அதேதான்: உங்களது பாதுகாப்பு அரண்களை எப்படியாவது அழித்துவிட நினைக்கும் எதிரிகள் படை, வரிசையாக வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால், இப்போது அவர்கள் முன்பைவிட சக்தி வாய்ந்தவர்களாக, முன்பைவிட ஆக்ரோஷமாக இருக்கிறார்கள்.
காலம் கடந்து நிற்கின்ற கோபுரங்கள் மட்டுமல்ல, இப்போது உங்களுக்கு புத்தம்புதிய ஆயுத வகைகளும் கிடைக்கும் . உங்களிடம் உள்ள பணத்தை எப்படி செலவு செய்வது என முடிவு செய்வதும் நீங்கள் தான். ஏற்கனவே உங்களிடம் உள்ள கோபுரங்களை அப்க்ரேட் செய்து பலப்படுத்த போகிறீற்களா அல்லது புதிதாக கட்டப்போகிறீர்களா? ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனித்துவமான தாக்குதல் தூரம், தாக்கும் வேகம், மற்றும் சேத வகை உண்டு. வெற்றி பெற ஒரே வழி, ஒன்றோடு ஒன்று இணைந்து பலமாக செயல்படும் வகையில் அவற்றினை சேர்ப்பது தான்.
மாற்றிக்கொள்ளக்கூடிய கடின அமைப்புகள், விளையாடும் ஒவ்வொருவரும் அதிகபட்ச மகிழ்ச்சியை அடைய உதவும். நீங்கள் அனுபவமிக்க தளபதி என்றால், ஒரு நொடியின் ஒரு பங்கு நேரம் கூட வெற்றிக்கு வழிவகுக்கக்கூடிய, சற்றும் இரக்கமற்ற, தீவிரமான சண்டைகளை மட்டுமின்றி, சாமர்த்தியமாக கோபுரங்களை தேர்ந்தெடுத்து, அடுக்கு வைப்பதையும் நீங்கள் விரும்புவீர்கள். ஒருவேளை நீங்கள் விளையாட்டிற்கு புதியவர் என்றால், தீவிரமான சண்டைகளுக்கு உங்களை நீங்களே சுலபமாக பயிற்சி செய்து தயார்படுத்திக்கொள்ளலாம்.
எப்படி இருந்தாலும், கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட வரைபடங்களும், பல வகையான கோபுரங்களும், உங்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வகுக்க வழி செய்யும். அசரவைக்கும் நிலப்பரப்புகள், சிரத்தயுடன் வடிவமைக்கப்பட்ட கோபுரங்கள், மற்றும் அட்டகாசமான ஸ்பெஷல் எப்பெக்ட்ஸ் உங்களை நகர விடாமல் விளையாட வைப்பது உறுதி.
கோபுர புள்ளிவிவரங்கள், எதிரியின் பலம், நிலப்பரப்பின் குணாதிசயங்கள், மற்றும் சிறப்பு ஆயுதங்கள் என விளையாட்டின் ஒவ்வொரு பகுதியும் மிக உன்னிப்பாக சீரமைக்கப்பட்டுள்ளன. மிகச்சுலபமாக விளையாடக்கூடிய விளையாட்டு என அவ்வளவு எளிதாக நீங்கள் சலிப்படையவே மாட்டீர்கள். ஆரம்ப நிலையே உங்களுக்கு சவாலானதாக இருக்கும். சவாலை ஏற்க நீங்கள் தயாரா?
அம்சங்கள்:
•அதி விரிவான அல்ட்ரா எச்.டி (4K) க்ராபிக்ஸ்
• நான்கு கடின நிலைகள்
• எட்டு வகையான கோபுரங்கள்
• வான்வழி தாக்குதல் முதல் அனுகுண்டுகள் வரை எட்டு சிறப்பு திறன்கள்
• பலவகையான பருவங்கள் மற்றும் விதவிதமான நிலப்பரப்புகள்
• 60 ற்கும் மேற்பட்ட மொழிகளுக்கான ஆதரவு
புதுப்பிக்கப்பட்டது:
11 டிச., 2024