Meta வழங்கும் WhatsApp, ஓர் இலவசமான மெசேஜிங் மற்றும் வீடியோ அழைப்புச் செயலியாகும். 180க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 200 கோடிக்கும் அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர். இது எளிமையானது, நம்பகமானது மற்றும் தனிப்பட்டது. இதன் மூலம் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் எளிதாகத் தொடர்புகொள்ளலாம். WhatsAppஐ மொபைலிலும் டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம். இதற்குச் சந்தாக் கட்டணம்* ஏதுமில்லை. இணைப்பு வேகம் மெதுவாக இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும்.
உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. உங்கள் கலந்துரையாடல்களில் பங்கேற்காத எவராலும் (WhatsApp உட்பட) இவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது.
உங்கள் மொபைல் எண் மட்டும் இருந்தால் போதும். பயனர் பெயரோ உள்நுழைவோ தேவையில்லை. WhatsAppஇல் உள்ள உங்கள் தொடர்புகளை உடனடியாகப் பார்த்து அவர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம்.
உயர்தரமான குரல் மற்றும் வீடியோ அழைப்புகள்
பாதுகாப்பான வீடியோ மற்றும் குரல் அழைப்புகளை இலவசமாகச்* செய்யலாம் (அதிகபட்சம் 8 பேர்). மொபைல் சாதனங்களில் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தி (இணைப்பு வேகம் மெதுவாக இருந்தாலும்) அழைப்புகளைச் செய்யலாம்.
குழு கலந்துரையாடல்கள் மூலம் எப்போதும் தொடர்பில் இருக்கலாம்
உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம். முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படும் குழு கலந்துரையாடல்கள் மூலம் மெசேஜ்கள், படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை மொபைலிலும் டெஸ்க்டாப்பிலும் பகிரலாம்.
நிகழ்நேரத்தில் தொடர்பில் இருக்கலாம்
தனிப்பட்ட கலந்துரையாடலிலோ குழு கலந்துரையாடலில் இருப்பவர்களுடனோ மட்டும் உங்கள் இருப்பிடத்தைப் பகிரலாம். பகிர்வதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். அல்லது விரைவாகத் தொடர்புகொள்ள, குரல் மெசேஜைப் பதிவு செய்து அனுப்பலாம்.
அன்றாடத் தருணங்களை ஸ்டேட்டஸாகப் பகிரலாம்
ஸ்டேட்டஸ் வழியாக உரை, படங்கள், வீடியோ, GIF அறிவிப்புகளைப் பகிரலாம். 24 மணிநேரத்தில் இவை மறைந்துவிடும். உங்கள் ஸ்டேட்டஸ் அறிவிப்புகளை அனைவருடனோ குறிப்பிட்ட சிலருடன் மட்டுமோ பகிரத் தேர்வு செய்யலாம்.
உரையாடல்களைத் தொடரவும், மெசேஜ்களுக்குப் பதிலளிக்கவும், அழைப்புகளை எடுக்கவும் உங்கள் Wear OS கடிகாரத்தில் WhatsApp ஐப் பயன்படுத்தவும் - எனவே இவை அனைத்தையும் உங்கள் மணிக்கட்டில் இருந்தே மேற்கொள்ளலாம். மேலும், உங்கள் கலந்துரையாடல்களை எளிதாக அணுகுவதற்கும், வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவதற்கும் டைல்கள் மற்றும் காம்ப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம்.
*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். மேலதிக விவரங்களுக்கு உங்கள் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளுங்கள்.
கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், WhatsApp > அமைப்புகள் > உதவி > எங்களைத் தொடர்பு கொள்க என்பதற்குச் செல்லவும்
புதுப்பிக்கப்பட்டது:
7 ஜன., 2025
தகவல்தொடர்பு
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 5 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
watchவாட்ச்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.3
198மி கருத்துகள்
5
4
3
2
1
sri sri
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
2 ஜனவரி, 2025
வாட்ஸ்அப் எனக்கு ஓபன் ஆக மாட்டேங்குது என்ன காரணம் தெரியல ப்ளீஸ் ஹெல்ப் மீ
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 62 பேர் குறித்துள்ளார்கள்
SELVI VSD SELVI VSD
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
20 டிசம்பர், 2024
மெசேஜ் தரவு அழி பயன் ஆப்சன் காட்டவில்லை என்னால் மெசேஜ் அழிக்க முடியவில்லை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 120 பேர் குறித்துள்ளார்கள்
Imran Nethu
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
8 ஜனவரி, 2025
my goorup millien mempersip ad 500000000000
புதிய அம்சங்கள்
• மெசேஜை அனுப்பிய பிறகு, 15 நிமிடங்களுக்குள் அவற்றைத் திருத்திக்கொள்ள முடியும். தொடங்குவதற்கு, ஒரு மெசேஜைத் தொடர்ந்து அழுத்தி ‘திருத்து’ என்பதைத் தேர்வுசெய்யவும். • பங்கேற்பாளர்களின் சுயவிவரப் படங்கள் குழு அரட்டைகளில் காட்டப்படும்.
வரும் வாரங்களில் இந்த அம்சங்கள் படிபடியாக வெளியிடப்படும். WhatsAppஐப் பயன்படுத்துவதற்கு நன்றி!