உலகெங்கிலும் உள்ள உள்ளூர் நூலகங்கள் லட்சக்கணக்கான மின் புத்தகங்களையும் ஆடியோ புத்தகங்களையும் வழங்குகின்றன. நூலக அட்டை மற்றும் Libby செயலியின் மூலம் நீங்கள் அவற்றை உடனடியாக இலவசமாக இரவல் பெறலாம்: இந்தச் செயலி சிறந்த செயலி என்ற விருது பெற்றுள்ளதுடன், நூலகப் புத்தகங்களுக்காக மிகவும் விரும்பப்படும் செயலியாகவும் உள்ளது.
• உங்கள் நூலகத்தின் டிஜிட்டல் புத்தக வகைப்பிரிவுகளை உலாவலாம் — கிளாசிக் புத்தகங்கள் முதல் NYT வெளியிட்டுள்ள சிறந்த விற்பனையாகும் புத்தகங்கள் வரை பல புத்தகங்கள் இங்குள்ளன
• மின்புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் மற்றும் இதழ்களை இரவல் வாங்கி மகிழுங்கள்
• ஆஃப்லைன் வாசிப்புக்காகப் புத்தகங்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம் அல்லது இடத்தைச் சேமிக்க அவற்றை ஸ்ட்ரீம் செய்யலாம்
• உங்கள் Kindleக்கு மின்புத்தகங்களை அனுப்பலாம் (அமெரிக்க நூலகங்கள் மட்டும்)
• Android Auto மூலம் ஆடியோ புத்தகங்களைக் கேட்கலாம்
• நீங்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய பட்டியலையும், நீங்கள் விரும்பும் ஏதேனும் பிற புத்தகப் பட்டியல்களையும் உருவாக்க புத்தகக்குறிகளைப் பயன்படுத்தலாம்
• உங்களின் எல்லாச் சாதனங்களிலும் உங்கள் வாசிப்பு நிலை தானாகவே ஒத்திசைக்கப்படும்படி அமைத்துக்கொள்ளலாம்
எங்களின் அழகான, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய மின்புத்தக வாசிப்புச் செயலியின் மூலம் ஐயாவை அனைத்தையும் செய்யலாம்:
• உரை அளவு, பின்னணி நிறம் மற்றும் புத்தக வடிவமைப்பு ஆகியவற்றைச் சரிசெய்யலாம்
• இதழ்கள் மற்றும் காமிக் புத்தகங்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம்
• சொற்கள் மற்றும் சொற்றொடர்களை வரையறுக்கலாம், தேடலாம்
• சேர்ந்து வாசிக்கக்கூடிய புத்தகங்களை உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கேட்கலாம்
• புத்தகக்குறிகள், குறிப்புகள், தனிப்படுத்தல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்
எங்கள் புதுமையான ஆடியோ பிளேயரில்:
• ஆடியோவின் வேகத்தைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம் (0.6 முதல் 3.0x வரை)
• ஸ்லீப் டைமரை அமைக்கலாம்
• ஸ்வைப் செய்து முன்னோக்கி/பின்னோக்கிச் செல்லலாம்
• புத்தகக்குறிகள், குறிப்புகள், தனிப்படுத்தல்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம்
எல்லா இடங்களிலும் உள்ள உள்ளூர் நூலகங்களின் ஆதரவுடன் OverDrive குழுவினரின் மூலம் Libby உருவாக்கப்பட்டுள்ளது.
வாசித்து மகிழுங்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
11 நவ., 2024