எனது வயது 58. எனக்கு பார்வைக் குறைபாடு உள்ளது. எனது கைகளில் விரல்கள் உள்ளன. அவை தீக்குச்சிகளைப் போன்றவையாக இல்லை. அதனால் இந்த விசைப்பலகையை எனக்காகவே உருவாக்கினேன். உங்களுடைய வயது 35 வருடங்களுக்கு குறைவாக இருப்பின் மற்றும் உங்களுக்கு கண்பார்வைக் குறைபாடுகள் எதுவும் இல்லாதிருப்பின் தயவு செய்து இதனை நிறுவ வேண்டாம். எனினும் அது உங்கள் பெற்றோருக்கான சிறந்த தீர்வாக அமைய முடியும்.
ஆண்ட்ரொய்டுக்கான இந்த பயனர் விசைப்பலகை பெரிய விசைகளுக்கு உங்கள் செல்பேசித் திரையின் 100 %ஐப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும், அதனால் சிறிய திரை கொண்ட உபகரணங்களுக்கும் கொழுத்த விரல்களுக்கும் இது அத்தியவசியமானதாகும் (100% என்பது ஒரு விளம்பர வாசகம் அன்று: அது உண்மையிலேயே 100% ஆகும்). 100% காட்சித் திரை முறைக்கு மாறுவதற்கு மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும்.
இந்த பெரிய விசைப்பலகை உங்கள் பார்வையைப் பாதுகாத்து, கண் அழுத்தத்தை குறைக்கும்.
பெரிய விசைப்பலகையிலுள்ள விசைகளை அடிப்பது மிகவும் இலகுவானதாகும் – பிழைகள் குறையும்
ஆண்ட்ரொய்டுக்கான இந்த பெரிய விசைப்பலகையின் வடிவம் கற்பதற்கு இலகுவானது – அது அழகான முறையில் பெரிய விசைப்பலகையாக அழுத்தப்பட்ட பெரிய க்வேர்ட்டி விசைப்பலகையாகும். அதனால் அது பெரிய கைகளுக்குப் பொருத்தமானதாகும்.
புதுப்பிக்கப்பட்டது:
12 ஜன., 2025