ஏற்கனவே தெரிந்த கருவியின் அணுகலை PowerPoint பயன்பாடு உங்களுக்கு அளிக்கிறது. எங்கிருந்தும் வேகமாக விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம், திருத்தலாம், பார்க்கலாம், காட்சிப்படுத்தலாம் அல்லது வேகமாகவும் எளிதாகவும் பகிரலாம். பயணத்தின் போதும் நீங்கள் மிகவும் சமீபத்தில் பயன்படுத்திய PowerPoint கோப்புகளை அணுக வேண்டுமா? எதிலும் எளிதாக அணுகுவதற்காக உங்களின் சமீபத்திய கோப்புகளின் விரைவான பார்வையை PowerPoint வழங்குகிறது. PowerPoint மொபைலில் பணியாற்றும் போது பலதரப்பட்ட கோப்பு பதிப்புகளை பற்றிய கவலை ஏற்படுகிறதா? எல்லாச் சாதனங்களிலும் தடையில்லாமல் ஒத்திசையுங்கள். நம்பிக்கையுடன் யாருடனும், எங்கிருந்தும் பணியாற்றலாம், காட்சிப்படுத்தலாம்.
PowerPoint மூலம் நீங்கள் தனித்து தோன்றும் வகையில் சக்திவாய்ந்த, தனிப்பயனாக்கக்கூடிய விளக்கக்காட்சிகளைப் பயன்படுத்தி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். எங்கிருந்தும், நம்பிக்கையுடன் உருவாக்கி, காட்சிப்படுத்த முடியும். அற்புதமான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளக்கக்காட்சியை உருவாக்குவது இதுவரை இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. PowerPoint மூலம் பயணத்தின்போதும் விளக்கக்காட்சியைத் திருத்தி தனிப்பயனாக்கலாம், நிகழ்நேரத்தில் பிறருடன் இணைந்து கூட்டுப்பணியாற்றலாம்.
நம்பிக்கையுடன் காட்சிப்படுத்துங்கள்
பயணத்திலும் PowerPoint தொடர்பானதைத் தவறவிட தேவையில்லை. புதிய விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம்/ஏற்கனவே உள்ளதில் தொடர்ந்து பணியாற்றலாம். PowerPoint, விளக்கக்காட்சிகளை OneDrive உடன் ஒத்திசைப்பதால், PC-இல் விளக்கக்காட்சியை உருவாக்க தொடங்கலாம், பிறகு PowerPoint மொபைல் மூலம் திருத்தலாம், காட்சிப்படுத்தலாம். லேப்டாப்பைத் திறக்காமலே, எதில் இருந்தும் நம்பிக்கையுடன் விளக்கக்காட்சியைக் காட்சிப்படுத்தி, கருத்துகளைத் தெரிவித்திடுங்கள்.
நீடிக்கும் தாக்கத்தை உருவாக்குங்கள்
அழகாக வடிவமைக்கப்பட்ட விளக்கக்காட்சி எப்போதும் வெற்றியாளராகத் திகழும். PowerPoint வழங்கும் சக்திவாய்ந்த மற்றும் அதிகம் தனிப்பயனாக்கக்கூடிய அனுபவம் மூலம், தாக்கத்தை உருவாக்கும் விளக்கக்காட்சிகளை உருவாக்கலாம், எளிதாகத் தனித்துத் தோன்றலாம்.
மற்றவர்களுடன் எளிதாகப் பணியாற்றலாம்
பிறருடன் இணைந்து கூட்டுப்பணியாற்றுவதை PowerPoint எளிதாக்கிவிட்டது. 1-கிளிக் பகிர்தல் மூலம் உங்கள் ஸ்லைடுகளை திருத்த, பார்க்க (அ) பின்னூட்டம் வழங்க, பிறரை உடனடியாக அழைக்கலாம். அனுமதிகளை எளிதாக நிர்வகிக்கலாம் & உங்கள் விளக்கக்காட்சியில் யார் வேலை செய்கிறார்கள் என்பதை காணலாம். ஸ்லைடுகளிலேயே கிடைக்கும் ஒருங்கிணைந்த கருத்துகளுடன் பிறரின் மாற்றங்கள் & பின்னூட்டங்களை உடனடியாகப் பார்க்கலாம். உங்கள் விளக்கக்காட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை காலவரிசையில் காணலாம்.
தேவைகள்
• OS பதிப்பு: ஆதரிக்கப்படும் Android பதிப்பு, ARM சார்ந்த அல்லது Intel x86 புராஸசர் இருக்க வேண்டும். Kitkat & Lollipop சாதனங்களுக்கான ஆதரவு ஜூன் 2019 வரை கிடைக்கும்.
• 1 GB RAM அல்லது அதிகம்
ஆவணங்களை உருவாக்க அல்லது திருத்த, 10.1 அங்குலம் அல்லது அதற்கும் சிறிய திரை அளவு கொண்ட சாதனங்களில் இலவச Microsoft கணக்கு மூலம் உள்நுழையவும்.
உங்கள் தொலைபேசி, டேப்ளட், PC மற்றும் Mac-க்கான தகுதிவாய்ந்த Microsoft 365 சந்தா மூலம் முழுமையான Microsoft 365 அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.
பயன்பாட்டில் Microsoft 365 சந்தாக்களை வாங்கினால், கட்டணம் உங்கள் Play ஸ்டோர் கணக்கில் வசூலிக்கப்படும். தானியங்கு புதுப்பிப்பு முடக்கப்படவில்லை எனில் நடப்பு சந்தா காலம் முடிவடைவதற்கு 24 மணிநேரம் முன்பாகப் புதுப்பிக்கப்படும். Play ஸ்டோர் கணக்கு அமைப்புகளில் சந்தாக்களை நிர்வகிக்கலாம். செயலில் உள்ள காலத்தில் சந்தாவை ரத்துசெய்ய முடியாது.
இது Microsoft அல்லது மூன்றாம் தரப்பு வெளியீட்டாளரால் வழங்கப்படுவதுடன், தனியான தனியுரிமை அறிக்கை, விதிகள் & நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும். இந்த ஸ்டோர் & இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் தரவு Microsoft/மூன்றாம் தரப்பு வெளியீட்டாளரால் அணுகப்படலாம், பொருந்துமிடத்தில், அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டிலும் உள்ள Microsoft அல்லது பயன்பாட்டு வெளியீட்டாளர், அவற்றின் துணை நிறுவனங்கள்/சேவை வழங்குநர்களின் முதன்மை மையங்களுக்கு தரவு மாற்றப்படும், சேமிக்கப்படும், செயலாக்கப்படும்.
சேவை விதிமுறைகளுக்கு, Microsoft EULA-ஐப் பார்க்கவும். பயன்பாட்டை நிறுவுவதன் மூலம், இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கிறீர்கள்: http://aka.ms/eula
புதுப்பிக்கப்பட்டது:
20 ஜன., 2025